மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக தொண்டர்களுக்கு மிகப்பெரிய சக்தியாக கருணாநிதிக்குப் பின் விளங்கியவர் க. அன்பழகன்.
கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவரின் இணை பிரியாத நண்பர். அமைச்சராகப் பணியாற்றிய நேரங்களில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர் க. அன்பழகன்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அன்னாரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அவரின் அரசியல் சாதனைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்' - திருநாவுக்கரசர்