ETV Bharat / city

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்: நாஞ்சில் சம்பத், நெல்லைக் கண்ணன், பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு அறிவிப்பு - பேரறிஞர் அண்ணா விருது

தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் நாஞ்சில் சம்பத், நெல்லைக் கண்ணன், சுகி சிவம், பாரதி பாஸ்கர் உள்ளிட்ட 16 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Development Department Awards 2021

author img

By

Published : Jan 26, 2022, 4:20 PM IST

சென்னை: தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 26) அறிவித்துள்ளார்.

விருதுத்தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு வழக்கப்படவுள்ளது. அதனுடன் விருதாளர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

2021ஆம் ஆண்டிற்கான விருது பட்டியல்

  • பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
  • மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்
  • சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
  • சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
  • தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்
  • சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ் (மாத இதழ்)
  • தேவநேயப்பாவணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்
  • உமறுப்புலவர் விருது - நா. மம்மது
  • கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. ராசேந்திரன்
  • கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
  • ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம்
  • மறைமலையடிகள் விருது - சுகி.சிவம்
  • இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன்
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்

இதையும் படிங்க: 73வது குடியரசு தின விழா - ஆளுநர் ரவி கொடியேற்றினார்.. அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.