ETV Bharat / city

சென்னையில் "நம்ம ஊரு திருவிழா” எப்பொழுது...? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் - சென்னையில் நம்ம ஊரு திருவிழா

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக சென்னையில் 21ஆம் தேதி "நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
author img

By

Published : Mar 19, 2022, 6:37 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில் 'நம்ம ஊருதிருவிழா' குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர். இந்நிகழ்வில் சுற்றுலா பண்பாடு துறை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”கலைபண்பாட்டுதுறை, சுற்றுலாத்துறை இணைந்து திங்கள் மாலை 6 மணியளவில் நம்ம ஊரு திருவிழா நடத்தவுள்ளது.

பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் அடங்கிய நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் நாட்டுப்புறகலைகள் மீட்டெடுக்கும் விதமாக இந்த திருவிழா நடைபெறுகிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுப்புறக் கலைகளுக்கு எதுவும் செய்யாத நிலையில் நாட்டுப்புறக் கலைகள் தற்போது நடைபெறுகின்றன. டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். கலை வடிவங்களின் சங்கமமாக இந்தத் திருவிழா நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்கள், சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் இந்தத் திருவிழா எல்.இ.டி திருவிழா மூலம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஒரு நாள் மட்டும் சென்னையில் நடைபெறும், மற்ற இடங்களில் நடைபெறும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதே இந்த திருவிழாவின் நோக்கம். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் மறுவடிவதான் நம்ம ஊருதிருவிழா. ஆண்டுதோறும் பொங்கல் நாள்களில் இந்தத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கரோனா காரணமாக வரும் பொங்கல் தினத்திற்குப் பதிலாக தற்போது நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்; பாகிஸ்தான், இலங்கை, சீனாவை விட பின்தங்கிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.