ETV Bharat / city

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு அறை கண்காணிப்பு அலுவலர்கள் அதிரடி மாற்றம் - தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் மாணவர்கள் நூதன முறையில் பிட் அடிக்க காகிதங்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வு பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு பணியில் இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு அறை கண்காணிப்பு அலுவலர்கள் அதிரடி மாற்றம்

author img

By

Published : May 20, 2022, 9:44 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5 ஆம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ஆம் தேதி தாவரவியல், உயிரியல், வரலாறு ஆகிய முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

பொதுத் தேர்வினை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திற்குத் தேர்வு கண்காணிப்பு அலுவலராக தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 9 ஆம் தேதி நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த போது, பள்ளியின் முதல்வர் வளாகத்திற்குள் உள்ளே இருப்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு

அதேபோல் 16 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்கு சென்றபோது ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதைப் பார்த்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் தேர்விற்கு முன்னதாகவே பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜெராக்ஸ் கடையில் இதுபோன்ற பணிகளைச் செய்தால் மூடுவோம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு

கடந்த 17 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு, விலங்கியல் தேர்வினை கண்காணிக்க சென்றபோது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். தேர்வு துவங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இருந்த பிட் பேட்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு

மாணவர்கள் தேர்வில் முறைகேடாக பிட்டு அடிக்க உதவியாக செயல்படும் தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தது. புதிய ஆசிரியரை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: போலி சான்றிதழ் வழங்கிய வழக்கு - பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கைது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.