மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை வேகப்படுத்தியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து தங்களது வேட்பாளர் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கைகளையும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். எனவே அக்கட்சி எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடும் என நாம் தமிழர் தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.