ETV Bharat / city

'ஹைட்ரோகார்பன் திட்டம் நெற்களஞ்சியத்தை அழித்துவிடும்' - நல்லகண்ணு - nallakannu speech against the Citizenship Amendment Act

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் அழிந்து விடும் என்று சிபிஐ மாநில செயலாளர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பல்லாவரத்தில் நல்லகண்ணு பேட்டி
பல்லாவரத்தில் நல்லகண்ணு பேட்டி
author img

By

Published : Jan 21, 2020, 7:51 AM IST

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், ஜே.என்.யு. மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் நல்லகண்ணு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திமுக, விசிக, சிபிஜ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நல்லகண்ணு, "கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தில் அவசர அவசரமாக தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அப்போது அதிமுகவினர் ஆதரிக்கவில்லை என்றால் இந்த சட்டம் நிறைவேறியிருக்காது. இச்சட்டத்தால் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களை பழி வாங்கவேண்டும் என்ற முறையில் அச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என்றார்.

பல்லாவரத்தில் நல்லகண்ணு பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "மதவெறி கொண்ட பாஜகவின் இந்தக் கொள்கையை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுவரை, 11 மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடிய ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அந்த மாணவர்களை தாக்கிய நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்.

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் 600 முதல் 700 அடி வரை ஆழ்துளைகள் அமைத்து தண்ணீரை வெளியேற்றுவார்கள். இதனால் கடல் நீர் உள்ளே வரும். இதனால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் அழிந்துவிடும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக அதிகார திமிரோடு அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கு வேதனையானது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால் உடனடியாக ஹைட்ரோகார்பனையும் மற்ற கனிமப் பொருள்களையும் எடுப்பதை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.

இதையும் படிங்க;

மாநிலங்களவை உறுப்பினராவாரா சீதாராம் யெச்சூரி?

Intro:தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலக்கழக மாணவர்கள் ஏ.பி.வி.பி மதவெறி மாணவர்கள் அமைப்பினர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபாலன் தலைமையில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Body:தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலக்கழக மாணவர்கள் ஏ.பி.வி.பி மதவெறி மாணவர்கள் அமைப்பினர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபாலன் தலைமையில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுறிமை இயக்க மாநில தலைவர் தோழர். ஆர்.நல்லகண்ணு கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆரம்பத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.போராட்டம் நடத்திய ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுருத்தி கோஸங்கள் எழுப்பினார்கள்.இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உட்பட 200க்கும் மேற்பட்ட பொது மக்கள், பழங்குடி மக்கள் சங்கத்தினர் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லகண்னு செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது

கடந்த டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவசரஅவசரமாக தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்தார்கள்.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிமுகவினர் ஆதரிக்கவில்லை என்றால் இந்த சட்டம் நிறைவேறியிருக்காது.

இதில் இஸ்லாமியர்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறது.இது மதத்தின் பெயரால் மத நல்லிணக்கமும் மத சார்பற்ற நாட்டில் மதசார்புள்ள முறையில் குறிப்பிட்ட இஸ்லாமிய மதத்தை பழி வாங்கவேண்டும் என்ற முறையில் அந்தத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதை நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அங்கிகறித்துவிட்டார்.ஆனால் மதவெறி கொண்ட பி.ஜே.பி யின் கொள்கையை எதிர்த்து இந்தியா முழுவதும் மதம் இல்லாமல், மத சார்பு இல்லாமல் அனைவரும் எல்லா மத்த்தை சேர்ந்தவர்களும் எல்லா மாநிலத்தவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை நடத்துகிறார்கள், 11 மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள் இருந்தும் மத்திய அரசு பிடிவாதமாக இந்த சட்டத்தை அமுல்படுத்த உறுதியாக இருக்கிறார்கள், இந்த சட்டத்தை திரும்ப பெறுகின்ற வரை இந்த ஒன்றுபட்ட போராட்டம் இந்தியாவெங்கும் நடைபெரும், 11 மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மறுத்து விட்டன தமிழ்நாடும் மறுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அந்த வகையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்கள், மாணவிகளும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அடியாட்களை கொண்டுவந்து உலகப் புகழ்பெற்ற நேரு பல்கலைக்கழகத்தில் கூட மாணவர்கள் தாக்கப்பட்டார்கள், தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது தவிர ஆனல் அந்த மாணவர்களை தாக்கிய மாறுவேடம் போட்டு வந்த அடியார்கள் மீது வழக்கு இல்லை, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.தேசிய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யவேண்டும் வலியுருத்துகிறேன்.தற்போது பி.ஜே.பி ஆட்சியின் கொடுமை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் நெற்க்கலஞ்சியமான காவேரி டெல்டா பிரதேசத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்து உள்ளார்கள்.அதை நிறைவேற்றினால் 600 முதல் 700 அடி வரை ஆழ்துளைகள் அமைத்து தண்ணீரை வெளியேற்றுவார்கள் இதனால் கடல் நீர் உள்ளேவரும் இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் அழிந்துவிடும், இந்த திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக அறித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது, சுற்றுசூழல் மதிப்பீடு கூட தேவையில்லை மக்களின் எதிர்ப்பும் தேவையில்லை நிச்சயம் நடைபெரும் என்று அதிகார திமிரோடு அறிவித்து இருப்பது தமிழகத்திற்கு வேதணையானது, தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால் உடனடியாக ஹைட்ரோ கார்பனும் மற்ற கனிம பொருட்கள் எடுப்பதை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.