ETV Bharat / city

பிரபாகரனை இழிவாகச் சித்தரித்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - சீமான் - Varane Avashyamund

சென்னை: துல்கர் சல்மான் நடித்த திரைப்படத்தில் பிரபாகரனின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

dulkar
dulkar
author img

By

Published : Apr 27, 2020, 1:32 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள 'வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)' திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு.வே.பிராபகரனின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பிரபாகரனை நடிகர் துல்கர் சல்மானோ, அல்லது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)" திரைப்படத்திலும் பிரபாகரனின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும். அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் அவர் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இவ்வாறு மலிவான காட்சிகளை பயன்படுத்தாமல் இருப்பதுதான், இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம் பயக்கும் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மான் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.