ETV Bharat / city

இன்னமும் அவர் தூறிக்கொண்டு இருக்கிறார் - மிஸ் யூ நா. முத்துக்குமார் - நா. முத்துக்குமார் நினைவு தினம்

நா. முத்துக்குமார் மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், அவரது இடத்தைப் பிடிக்க இன்றுவரை யாரும் வரவில்லை. இனி வருவார்களா என்ற கேள்விக்கும்; யார் அவர் இடத்திற்கு வந்தாலும் அவர்போல் சக மனிதனின் தோள் மேல் கைப்போட்டுக்கொண்டு கவிதையோ, பாடலோ எழுதுவார்களா?

na muthukumar
author img

By

Published : Aug 13, 2019, 11:59 PM IST

நமது வலியை, கொண்டாட்டத்தை, சோகத்தை, கோபத்தை, ஏக்கத்தை யாரேனும் பொதுவெளியில் நம் அனுமதியின்றி பேசினால் முதலில் கோபம் வரும். ஆனால், பாடலில் முன் கூறிய அனைத்தையும் ஒருவர் பேசினால் அவர்தான் மனதுக்கு நெருக்கமாவார். அப்படி பேசியவர்களில் நா. முத்துக்குமார் முதன்மையானவர்.

காதலைக் காதலியிடம் சொல்லவேண்டுமா, நண்பனிடம் நட்பை பறைசாற்ற வேண்டுமா, உள்ளே தேங்கியிருக்கும் பாசத்தை தந்தையிடமும், தாயிடமும் காண்பிக்க வேண்டுமா இப்படி நமக்கு எது வேண்டுமானாலும் அதற்கு முத்துக்குமாரின் வரிகள் வேண்டும். ஏனெனில் அவர் நமது எண்ணத்தை 20 வருடங்களுக்கும் மேலாக பாடலில், கவிதையில் பிரதிபலித்தவர். நமது வீட்டிலிருந்து ஒருவர் பாடல் எழுதச் சென்றால் ஒருவர் எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியவர் அவர்.

நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார்

பொதுவாக தந்தைக்கும் மகனுக்குமிடையே மெல்லிய சுவர் ஒன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் மகன்களுக்கும், தந்தைகளுக்கும் உள்ள அந்த சுவரை தனது பேனா முள் கொண்டு அவர் உடைத்தார். ‘என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீயல்லவா’ இந்த வரிக்குள் இருக்கும் வாழ்க்கையைத்தான் வளர்ந்த மகனும், 50 வயதுக்கு மேல் இருக்கும் தந்தையும் எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறார்கள்.

அக்கா என்பவள் ஒருவனுக்கு முதல் தோழி, இரண்டாம் தாய். தமிழ் சினிமாவில் அக்காக்கள் பற்றிய பாடல்கள் வெளிவந்தது என்பது மிக குறைவு. அந்த குறையை ‘ கண்ணில் அன்பை சொல்வாளே’ என்ற பாடல் மூலம் தீர்த்து வைத்தார்.

அதிலும்,

”கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய்க் காப்பாள் மண் மேலே
உயரம் கொஞ்சம் வளர்ந்தபோதும் குழந்தை என்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால்கூட நான் தான் இவளின் பிள்ளை”

என்று அவர் எழுதிய இந்த வரிகள்தான் எதார்த்த வாழ்வில் அக்காக்களின் கதாபாத்திரம். முக்கியமாக தனது தம்பி எவ்வளவு வளர்ந்தாலும் ஏன் அடுத்தவளுக்கு கணவன் ஆனாலும், ஒரு உயிருக்குத் தகப்பன் ஆனாலும், உயிரின் உயிருக்கு தாத்தாவே ஆனாலும்கூட அக்காவைப் பொறுத்தவரை அவளுக்கு அவன் எப்போதும் அந்த சிறுவயது தம்பிதான், மூத்த குழந்தைதான். இப்படி பல பல உறவுகளை வரிகளில் வைத்து வீட்டில் ஒருவர் ஆகியிருக்கிறார் முத்துக்குமார்.

முத்துக்குமார்
முத்துக்குமார்

சிலரது வெற்றிடத்தை வேறு சிலர் நிரப்பலாம், இல்லை நிரப்ப முயலலாம். ஆனால் முத்துக்குமாரின் வெற்றிடத்தை அவ்வளவு எளிதாக நிரப்ப முடியாது, நிரப்ப முயல்வதே பெரும் சவால்தான். ஏனெனில் யாரும் இங்கு அவர் போல் வாழ்வை அவ்வளவு எளிதாக அணுகவில்லை. சாலிகிராமத்திலும், வடபழனியிலும், கே.கே.நகரிலும் அவர் சாலையோரம் நின்றுகொண்டு, சிறு கட்டடத்துக்குள் அமர்ந்துகொண்டு, காற்றாடியைப் பார்த்துக்கொண்டு படைத்த பாடல்கள்தான் இன்று பலரது இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றன. நியாயமாகச் சொல்லவேண்டுமென்றால் முத்துக்குமார் நமது பங்காளி.

யுவனுடன் முத்துக்குமார்
யுவனுடன் முத்துக்குமார்

ஒரு இசையமைப்பாளர்தான் பாடலாசிரியர் கரியரை இதுவரை மாற்றிக்கொண்டிருந்தார். ஆனால், யுவனின் கரியரை முத்துக்குமாரின் வரிகள்தான் மாற்றின. இது யுவன்ஷங்கர் ராஜாவே ஒத்துக்கொண்ட உண்மை. இந்த உலகம் எப்போது வறியவனின் வலியைக் கண்டுகொள்வதில்லை. அவனது வாழ்க்கை ஒரு இலை போன்றது. அந்த இலை கீழே வீழ்ந்தால் அதைத் தாங்க எந்த கையும் நீளாது. ஆனால், முத்துக்குமாரின் கைகள் மட்டும்தான்,

’மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவர்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும் !
வறியவன் வாழ்க்கை, இலை போல என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்’ என்று நம்பிக்கையை விதைத்தன. இப்படி கடைசிவரை எளியவர்களுக்காகவே வாழ்ந்து எளிமையாகவே சென்றவர் முத்துக்குமார்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார்
பாடலாசிரியர் நா. முத்துக்குமார்

காக்கா முட்டை திரைப்படத்தில் அவர் ’கறுப்பு கறுப்பு’ என்ற பாடலில்,

”ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது

அவனால்தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது” என நிறம் குறித்தும், ஆடை குறித்தும் அந்தப் பாடலில் அவர் பேசியிருந்த விஷயங்கள் மூலம் நிறத்தையும், ஹை கிளாஸ் உடைகளையும் கவனிக்கும் அதிகாரவர்க்கத்தோடு பெரும் சண்டை செய்திருக்கிறார்.

நா. முத்துக்குமாருடன் ஜிவி பிரகாஷ்
நா. முத்துக்குமாருடன் ஜிவி பிரகாஷ்

இந்தியாவின் தற்போதைய ஹாட் பிரச்னை காஷ்மீர். அப்பிரச்னை குறித்து தமிழில் சினிமாக்கள் வந்தாலும் முழுமையாக அதை பதிவு செய்ததா என்றால் இல்லை. அதுகுறித்து பாடல்கள் என்றால் இதுவரை தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஒரே பாடல் அரண் திரைப்படத்தில், “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்று நா. முத்துக்குமார் எழுதிய பாடல்.

காஷ்மீர் பிரச்னைக்குள் பின்னியிருக்கும் அரசியல் நிலவரம் என்பது இரண்டு நாடுகளுடன் தொடர்புகொண்டது. காஷ்மீரின் பிரச்னையை மேற்கூறிய பாடலில் முத்துக்குமார் ஆழமாகவே பேசியிருக்கிறார்.

'பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ' என கேள்வி கேட்டுவிட்டு, ’எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம் நாணம் கொண்டு அன்று; மரணம் கண்டு இன்று’ என்று அப்பெண்களின் நிலையை அப்பட்டமாக முகத்தில் அறைந்திருப்பார். மேலும், ரோஜா என்பது மற்ற மாநிலங்களில் காதலின் சின்னம். ஆனால் காஷ்மீரின் ரோஜாக்களையும், அந்த ரோஜாவுக்குள் இருக்கும் பலரின் மரணித்த காதலையும் யாரேனும் யோசித்திருக்கிறோமா? ஓ எங்கள் காஷ்மீரின் ரோஜாப் பூ விதவைகள் பார்த்து அழத்தானா? என்ற அவரது கேள்வியில் ஒரு நூற்றாண்டின் அசிங்கமான அரசியல் இருக்கிறது.

முத்துக்குமார்
முத்துக்குமார்

அதுமட்டுமின்றி, அரசியல் விளையாட்டில் விழி பிதுங்கி நிற்கும் காஷ்மீரிகளின் பரிதாப நிலைமைக்கு முத்துக்குமார் வழக்கறிஞராக மாறி,

ஓ அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
ஓ அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்

எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேட்கும்
சதி எல்லாம் யார் செய்தார்? என்று கேள்வி எழுப்புகிறார்.

நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார்

முத்துக்குமார் காதல் பாடல்களில்தான் கெட்டிக்காரர். அரசியல் சார்ந்து அவர் எழுதவில்லை என்று எவரேனும் கூறினால் அவர் இந்த ஒரு பாட்டை கேட்டால் போதும். முத்துக்குமார் தனக்கு கிடைத்த வெளியில் அரசியல் குறித்து அறமாகக் கோபப்பட்டிருக்கிறார். என்ன செய்வது முத்துக்குமாரின் காதல் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டடிக்க தொடர்ந்து அந்த பாடல்களே அவரை மொய்த்துக்கொண்டிருந்தன. ஒருவர் ஒரு ஜானரில் ஹிட் கொடுத்துவிட்டால் அவரை அதே ஜானரில் அடக்க நினைப்பதுதானே கோலிவுட்டில் காலங்காலமாக இருந்துவரும் நடைமுறை. ஆனால், முத்து அதில் அடங்காமல் தன்னிடம் எப்போதாவது வரும் அரசியல் தீக்குச்சியைக் கொண்டு காலமும் அழியாத தீயை மூட்டிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அந்த தீயை நாம்தான் கவனிக்க மறந்திருக்கிறோம்.

முத்துக்குமார் பாடல்களின் மனிதமும், அரசியலும் மட்டும்தான் இதுவரை பெரும்பாலானோரால் பந்திக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தனது பாடல்களைவிட கவிதைகளில்தான் அனைத்தையும் காத்திரமாக வைத்திருக்கிறார்.

புத்தகக் காட்டில் முத்துக்குமார்
புத்தகக் காட்டில் முத்துக்குமார்

ஒவ்வொரு முறை
வீடுமாறும் போதும்
சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய்ச் சொல்வது
வீடு மாற்றுவதை என்று முடியும் அவரது ஒரு கவிதை. இதற்கு மேலும் சக உயிர் மேல் ஒருவரால் மனிதம் காட்ட முடியுமா?

இந்த உலகில் மிகக்கொடுமையான வார்த்தை என்னவென்றால் ’ஐயோ பாவம்’. அந்த வார்த்தையை சொல்பவர்களுக்குள் இரக்கம் விளையும். ஆனால் அதை கேட்பவர்களை அவர்களுக்குள்ளேயே அது புதைக்கும். அதை முத்து இப்படி சொல்கிறார்,

இன்றைக்கும்
கைக்குழந்தையோடு
பேருந்தில் பயணிப்பவளுக்கு
எழுந்து இடம் கொடுக்க
ஆளிருக்கிறது.

இன்றைக்கும்
சுருதி சேராமல் பாடும்
பிளாட்பார பிச்சைகளுக்கு
சில்லறைகள் விழுகின்றன.

இன்றைக்கும்
புழக்கத்திலிருக்கிறது
ஐயோ பாவம் என்ற வார்த்தை....

முனைவர் நா. முத்துக்குமார்
முனைவர் நா. முத்துக்குமார்

ஒருவனுக்கு ஒன்று இல்லையென்றால் இருப்பவன் கொடுக்க வேண்டும். அதுதான் நமது சமூகம் முன்னொரு காலம் நமக்கு சொல்லிக் கொடுத்தது. ஆனால் தற்போதெல்லாம் அந்த காலம் காலாவதியாகிவிட்டது. இதுகுறித்து நாம் இப்போது நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், முத்துக்குமார் 1992ஆம் ஆண்டு இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார்,

வாயிலில் நுழைந்தால்
பிச்சைக்காரன்
அம்மா… அய்யா… பத்துக்காசு
குரல்கள் கேட்கும்
செவிடன் காதில்
ஊதிய சங்காய்
காரிலிருந்து இறங்கியவுடன்
வேகவேகமாய்
ஐயர் நுழைவார்
அவரது தயவால்
அபிஷேகம் நடக்கும்
பாலும் பழமும் பாழாய் போகும்... என்ற அவரது இந்த கவிதை, மனிதனை சக மனிதன் துச்சமாக நினைக்க வைக்கும் மரபுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது.

முத்துக்குமாரின் பல கவிதைகள் ஆழ்ந்த மனிதத்தையும், அரசியலையும், மரபு உடைப்புகளையும் பேசியிருக்கின்றன. அவரது பாடல்களைவிட கவிதைகள் உண்மையை அதிகம் பேசியிருக்கின்றன. ஏனெனில், கவிதைக்குப் பொய்யழகு என பலர் கூறிக்கொண்டிருந்த சமயத்தில், ’கவிதைக்கு மெய்யும், நேர்மையும்தான் அழகு’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவர். முத்துக்குமாரின் பாடல்ளைக் கவனிப்பது போல் அவரது கவிதைகளையும் கவனிக்க வேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம். அதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதையும்கூட.

நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார்

முத்துக்குமார் யாரையும் நாத்திகவாதி, ஆத்திகவாதி என்று பிரித்ததே கிடையாது. அவரைப்பொறுத்தவரை அனைவரும் இங்கு பிரபஞ்சவாதிகள் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டவர். அதனால்தான் அவரால் மனிதத்தையும், அறமான அரசியலையும் கடைசிவரை பேசமுடிந்தது.

இப்படி அவரின் கவிதைகளும், பாடல்களும் பேசிய மனிதத்தையும், அரசியலையும் பேசிக்கொண்டே செல்லலாம். முத்துக்குமார் மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், அவரது இடத்தைப் பிடிக்க இன்றுவரை யாரும் வரவில்லை. இனி வருவார்களா என்ற கேள்விக்கும்; யார் அவர் இடத்திற்கு வந்தாலும் அவர் போல் சக மனிதனின் தோள் மேல் கைப்போட்டுக்கொண்டு கவிதையோ, பாடலோ எழுதுவார்களா என்ற கேள்விக்கும் காலத்திடம் மட்டுமே விடை இருக்கிறது.

கவிஞர் நா. முத்துக்குமார்
கவிஞர் நா. முத்துக்குமார்

முத்துக்குமார் எப்படி பாடல் எழுதினார் என அவரது வரிகளில் சொல்ல வேண்டுமெனில்,

’யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் யாரோதான் என் வாழ்வை எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது’...

ஒரு கவிஞர் என்பவர் மனித மனதுக்குள் கிடக்கும் மண்ணை கிளறி அதில் விதை வீச வேண்டும். அப்போதுதான் அவரது வேர்கள் காலம் முழுக்க கிளை பரப்பி ஏதோ ஒரு தூறலை மனிதரிடத்தில் தூறிக்கொண்டே இருக்கும். ஆம், சந்தேகமே இல்லாமல் அவர் அனைவரது மனதையும் எட்டிப்பார்த்து அதில் இருந்ததை பாட்டில் வைத்து இன்னமும் தூறிக்கொண்டே இருக்கிறார்.

மிஸ் யூ நா. முத்துக்குமார்....

Intro:Body:

Na. Muthukumar 3rd Death Anniversary

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.