ETV Bharat / city

‘காவல்துறை தாக்கி முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்க!’

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடியால் இருவர் உயிரிழந்ததாக பொய்யானத் தகவல் பரப்பியவர்களைக் கண்டித்து இஸ்லாம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

complaint
complaint
author img

By

Published : Feb 15, 2020, 3:52 PM IST

இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம், “சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியையும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை இழிவுபடுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாக, பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர்.

மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது மற்றும் டி.என்.டி.ஜெ முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் முகமது யூசுப், என்.பி.எப் அமைப்பின் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் ஆகியோர் மீதும், இஸ்லாமிய மக்களை வன்முறை பாதைக்கு கொண்டு செல்லும் எஸ்டிபிஐ, பிடிஎப் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை தாக்கி முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்க!

மேலும், நான்கு ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் இயற்கையான முறையில் பலியானதை, போராட்டத்தில் தாக்கப்பட்டு இறந்ததாக பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர். அதனால், இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.