ETV Bharat / city

முக்கிய ஆவணங்களில் தாயின் பெயர் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு - court news tamil

அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

முக்கிய ஆவணங்களில் தாயின் பெயர்
முக்கிய ஆவணங்களில் தாயின் பெயர்
author img

By

Published : Sep 4, 2021, 10:27 PM IST

சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயதிருந்தார்.

அம்மனுவில், திருமணம், பூப் புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில், அரசு ஆவணங்கள், வங்கி, கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கபட்டுள்ள நிலையில், சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றும் கொள்ளும் போது, தந்தை குறித்த விவரங்கள கோர முடியாது என்றும், நாட்டை தாய்நாடு மற்றும் மொழியை தாய்மொழி, நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்த கொண்டு வர வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில், செப்டம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.