சென்னை: மாம்பலத்தைச் சேர்ந்தவர், சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகினுக்கும், தாய் தாஜ் நிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
2014ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஷாகினுக்கும், தாஜ் நிஷாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தாஜ் நிஷா, கொதிக்கும் எண்ணெயை ஷாகின் மீது ஊற்றியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து தாஜ் நிஷாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை இன்று சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, நீதிபதி டி.எம். முகமது பாருக், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: GOLD THEFT - நகைப் பட்டறையில் நகை, பணம் கொள்ளை