ETV Bharat / city

குழந்தை பெற்ற பின் தாய்க்கு கரோனா தொற்று உறுதி

சென்னை: குழந்தை பெற்ற பின் தாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை பெற்ற பின் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி

author img

By

Published : Apr 30, 2020, 9:38 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் கபாலி நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நிறைமாத கர்ப்பிணி கடந்த 27ஆம் தேதி மீர்சாகிபேட்டை பேகம் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்போது அந்த பெண்ணுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனையின் முடிவு இன்று வந்துள்ளது. அதில் அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தப் பெண்ணை உடனடியாக கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் இவருடன் தங்கியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்திவிட்டு கபாலி நகரை போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவும் தன்னார்வலர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.