ETV Bharat / city

இந்த வாரம் வரிசைகட்டும் புதுப்படங்கள் - சினிமா ரசிகர்கள் குஷி! - கதிர்

காத்து வாக்குல ரெண்டு காதல், ஹாஸ்டல், கதிர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

movies
movies
author img

By

Published : Apr 27, 2022, 9:49 PM IST

சென்னை: கடந்த வாரம் ஆர்ஆர்ஆர், பீஸ்ட் , கேஜிஎஃப் ஆகிய படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், திரையரங்குகளில் புதுப்படங்கள் குறைவாகத்தான் வெளியாகின. இந்த வாரம் பெரிய படங்களுடன் சேர்ந்து சிறிய படங்களும் வெளியாக உள்ளன.

"காத்து வாக்குல ரெண்டு காதல்"

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". இதில், நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ளனர். நாயகன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதலில் இருப்பதால், ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விளைவுகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் நகைச்சுவையான கதையாக உருவாக்கியுள்ளார்.

"நானும் ரௌடி தான்" படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவான பாடல்கள் இப்படத்திற்கு ப்ளஸாக அமைந்துள்ளது. ரொமாண்டிக் காமெடியாக உருவான இந்த படம் நாளை (28.4.2022) வெளியாகிறது.

"ஹாஸ்டல்"

"அடி கப்பியாரே கூட்டமணி" என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹாஸ்டல்". ஒரு ஆண்கள் விடுதிக்குள் சென்ற பெண்ணை, அங்குள்ள ஆண்கள் அனைவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் வெளியே அனுப்புவதற்கு முயற்சி செய்வதுதான் கதை.

இதில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். "மன்மத லீலை" படத்தை தொடர்ந்து இந்த மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. இத்திரைப்படமும் நாளை(28.4.2022) வெளியாகிறது.

"கதிர்"

சந்தோஷ் பிரதாப், நடிப்பில் உருவாகியுள்ள படம் "கதிர்". அவருடன் வெங்கடேஷ் , ரஜினி சாண்டி, ஆர்யா பிரசாத் உள்ளிட்ட பல புது முகங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிச்சாமி படத்தை இயக்கி இருக்கிறார். விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற கதிர் திரைப்படம், ஏப்ரல் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

"ஜன கன மன"

டிரைவிங் லைசன்ஸ் படத்திற்கு பிறகு , பிரித்திவ் ராஜ், சுராஜ் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் "ஜன கன மன". ஒரு போலீசுக்கும் அவரால் குற்றவாளியாக ஆக்கப்பட்டவருக்கும் இடையில் நடக்கும் ஆடு-புலி ஆட்டம்தான் படத்தின் கதை. க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் நாளை(28.4.2022) வெளியாகிறது .

இதுமட்டுமல்லாமல் சிரஞ்சீவி-ராம் சரண் நடிப்பில் "ஆச்சார்யா" மற்றும் "மெமரி" என்ற ஹாலிவுட் திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.

இதையும் படிங்க: சந்தானம் நடிக்கும் புதிய படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.