ETV Bharat / city

மருத்துவப் படிப்பில் மாணவர்களை விட மாணவிகள் ஆர்வம்! - மருத்துப்படிப்பில் மாணவிகள் அதிகளவில் விண்ணப்பம்

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர மாணவர்களை விட, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

mbbs-and-bds-courses
mbbs-and-bds-courses
author img

By

Published : Nov 17, 2020, 3:57 PM IST

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களின் அடிப்படையில், பொதுப் பிரிவில் பெறப்பட்ட விண்பங்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 707 ஆகும். அதில் மாணவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 765 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 942 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட 951 விண்ணப்பங்களில் 266 மாணவர்களும், 685 மாணவிகளும் விண்ணபித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்காக பெறப்பட்ட 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்களில், மாணவர்கள் 5 ஆயிரத்து 67 பேரும், மாணவிகள் 9 ஆயிரத்து 209 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மொத்தமாக மருத்துவப் படிப்பில் பெறப்பட்ட 38 ஆயிரத்து 934 விண்ணப்பங்களில், மாணவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 98 ஆகவும், மாணவிகள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 836 ஆகவும் உள்ளது.

இதையும் படிங்க: ’மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.