தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”மக்களவைத் தேர்தலில் 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
69 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும், சுமார் 50 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தினகரன் தரப்புக்கு சின்னம் ஒதுக்குவதை தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யமுடியும்.
மேலும், திமுக மீது அதிகபட்சமாக 10 தேர்தல் வழக்குகளும், அதிமுக மீது 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.