சென்னையில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மார்க்கெட் பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், வங்கிகள், நியாய விலை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் உள்ள 81 மார்க்கெட் பகுதிகளை உதவி பொறியாளர் தலைமையில் மூன்று மார்க்கெட் உறுப்பினர்கள் மற்றும் காவல் துறையினருடன் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். மேலும் அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறும் கடைகளுக்கு முதலில் அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்படும் அடுத்த முறை விதிகளை மீறினால் கடைகளை மூடி சீல் வைக்கப்படும். இரண்டு நாள்களுக்குள் அனைத்து சந்தைகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களில் இணைக்கப்படும்.
கோயம்பேடு சந்தையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களிடையே ஆலோசனை நடைபெற்றுவருகிறது. தற்காலிக சந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்ப பழைய இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. இதுவரை இரண்டு பேர்தான் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
சென்னை: அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிட சென்னை மாவட்ட ஆட்சியர், அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார் .