ETV Bharat / city

காவல் துறையின் தவற்றை மறைக்க பணம்? மரணமடைந்த ராஜசேகரின் தாய் குற்றச்சாட்டு! - rajasekaran

காவல் மரணத்தை மறைக்கப் பணம் தர காவல் துறை முயற்சிப்பதாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த ராஜசேகரனின் தாய் உஷா ராணி தெரிவித்துள்ளார்.

காவல்துறை தவரை மறைக்க பணம்?  மரணமடைந்த ராஜசேகரன் தாய் குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 14, 2022, 5:17 PM IST

Updated : Jun 14, 2022, 9:38 PM IST

சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மரணமடைந்த ராஜசேகரின் தாய் உஷா ராணி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்காக இன்று(ஜூன் 14) ஆஜரானார். ராஜசேகரின் தாயார் உஷாராணி மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்ததாக மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மற்றும் ராஜசேகரின் உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால பரிந்துரை செய்துள்ளது. மேலும் கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் உஷா ராணி மற்றும் அவர்களது உறவினர்கள் பாதுகாப்புக்கருதி தங்க ஏற்பாடு செய்யுமாறும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

ராஜசேகரின் உடற்கூராய்வு அறிக்கை கிடைக்கவில்லை எனவும்; அவரது தாய் உஷா ராணி தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம், விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கை கொடுக்குமாறும் சென்னை காவல் ஆணையரிடம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படியும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தாய் குற்றச்சாட்டு: இதற்கிடையில் தாயார் உஷா ராணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்னுடைய மகன் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை. உடனடியாக பிரேதப்பரிசோதனை முதல் மருத்துவ அறிக்கையைப் பெற்று தருமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளோம். இன்று(ஜூன் 14) கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள்.

அங்கு சென்ற பிறகு வழக்கறிஞர் ஒருவர் மூலம் காவல் துறை பணம் தர முயன்றனர். சஸ்பெண்டான 5 காவலர்களுக்கு தலா 2 லட்சம் வீதம் ரூ. 10 லட்சம் தருவதாக வழக்கறிஞர் ஒருவர் தங்களிடம் கூறினார். கொலை வழக்குப் பதிய வேண்டும். ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜை கைது செய்யவேண்டும்" என்று கண்ணீரோடு கூறினார்.

இதனைத்தொடர்ந்து காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. சென்னையில் விக்னேஷ் மரணத்தைத் தொடர்ந்து தற்போது ராஜசேகரின் காவல் மரணம் நிகழ்ந்து உள்ளது.

உடற்கூராய்வு நிகழ்ந்து 24 மணி நேரத்தில் முதல் மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை சென்னை காவல் துறை பொருட்படுத்தாமல் அறிக்கையைத் தர மறுக்கிறார்கள்.

மேலும் ராஜசேகர் மரண வழக்கில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக 8 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை அரசு ராஜசேகரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.

காவல் துறையின் தவற்றை மறைக்க பணம்?

ராஜசேகர் மரண வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. உடனடியாக மாஜிஸ்திரேட்டிடம் இருந்து முதல் மருத்துவ அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையம் பெற்று தரவேண்டும் என ராஜசேகரின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். இறந்துபோன ராஜசேகரின் உடலில் லத்தியால் தாக்கிய காயம் மற்றும் விரல் உடைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காவல் ஆய்வாளர் மில்லர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் மில்லர் உட்பட 5 காவல் துறையினரை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொடுங்கையூர் விசாரணை கைதி சந்தேக மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்..

Last Updated : Jun 14, 2022, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.