ETV Bharat / city

பரோல் விதிகளில் மாற்றம் தேவை - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jul 11, 2020, 6:53 PM IST

சென்னை: இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்குவதற்கான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கடத்தல் சம்பவத்துக்கு துணை போனதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ்செல்வனுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, மனுதாரரின் கணவர் சிறையில் ஒரு ஆண்டு நான்கு மாதங்கள்தான் சிறையில் இருக்கிறார். தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறை விதிகள் உள்ளன என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழ்செல்வன் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை தேவை என்றும், அவரது மகள்களின் கல்விச் செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்செல்வனுக்கு ஆகஸ்டு 7ஆம் தேதிவரை பரோல் வழங்கப்படுகிறது. அவர் திங்கள்கிழமை தோறும் கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், அதிக சிறை தண்டனை பெற்றவர்களுக்கும், குறைந்த ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களுக்கும் பரோல் பெற ஒரே விதமான நிபந்தனை உள்ளது. இதனால், சிறை கைதிகளின் உரிமை பாதிக்கப்படுகிறது.

எனவே, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் தருவதில் சிறை விதிகளில் திருத்தத்தை அரசு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியதோடு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.