சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (ஜன. 8), நாளை மறுதினம் (ஜன.9) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜனவரி 10, 11 நிலவரம்
டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 10ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மூடுபனி எச்சரிக்கை
இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
இதையும் படிங்க: 'அம்மா உணவகம் மூடப்படாது, இதுவே என் முடிவு'- முதலமைச்சர் ஸ்டாலின் உரை