ETV Bharat / city

தேர்வு மையம் வளாகத்திற்குள் செல்போன்களுக்கு தடை

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தேர்வு மையம் வளாகத்திற்குள் செல்போன்களுக்கு தடை
தேர்வு மையம் வளாகத்திற்குள் செல்போன்களுக்கு தடை
author img

By

Published : May 4, 2022, 7:31 AM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்தாம் வகுப்பிற்கு மே 5 முதல் 30ஆம் தேதி வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான வகுப்பிற்கு மே 10 முதல் மே 31ஆம் தேதி வரையும், மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான வகுப்பிற்கு மே 5 முதல் மே 28ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பில் 9,55,139, மேல்நிலை முதலாம் ஆண்டில் 8,85,053, மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 8,37,311 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 10, 11, 12ஆவது வகுப்பிற்கான தேர்வு நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள் மற்றும் முகப்புத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணிகளில் அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள், ஒழுங்கீன செயல்கள் நடைபெறாத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்கு 4,291 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது செல்போனை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது.

ஆசிரியர்களோ மாணவர்களோ தேர்வு வளாகத்திற்குள் செல்போன் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாளை வைத்திருந்தாலோ, துண்டுத்தாளை பார்த்து எழுத முயற்சித்தாலோ, மற்ற முறைகேடுகளில் ஈடுபட்டாலோ மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.

மேலும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தால் பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 10, 11, 12ஆம் வகுப்பிற்கு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதாவது புகார்கள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், அதை பதிவு செய்யும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் முழுநேரத் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குவைத்தில் சிக்கித்தவித்த பெண்: 5 நாட்களில் மீட்ட தமிழ்நாடு போலீசாருக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.