சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எஸ்.கொடிக்குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை எனவும், ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 புதிய நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மக்கள்தொகை அடிப்படையில் அமைக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்கும், 389 மருத்துவ வாகனங்களில் சென்று, மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மழைக்காலங்களில் வீணாகும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தலாம் - ஆணையம் அமைக்க கோரிக்கை