சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று (ஏப்.8) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார்.
அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் சந்தைப்படுத்த, ஒரு பொதுவான சந்தைப்படுத்துதல் உருவாக்குவது அவசியம் ஆகிறது.
எனவே கூட்டுறவுகளின் அனைத்து தயாரிப்புகளையும் பெரிய அளவில் சந்தைப்படுத்துவதற்கு மாநில அளவிலான ஒரு பொதுவான கைபேசி செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்