ETV Bharat / city

'கமல்ஹாசன் வீதிக்கு வருவார்'- எச்சரித்த மௌரியா! - மநீம துணைத்தலைவர் மௌரியா

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை திரும்பப்பெறாவிட்டால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீதிக்கு வந்து போராடுவார் என மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மௌரியா தெரிவித்துள்ளார்.

வரி உயர்வை திரும்ப பெறவிட்டால் கமல்ஹாசன் வீதிக்கு வருவார்- மநீம துணைத்தலைவர் மௌரியா!

author img

By

Published : Apr 9, 2022, 3:26 PM IST

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வு சொத்து வரி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மௌரியா மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். கேஸ் சிலிண்டருக்கு பூ வைத்து, பானை மற்றும் சைக்கிள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து மத்திய மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மௌரியா, "தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகர் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல், கேஸ் விலை மற்றும் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏழைகளைத் துன்புறுத்த வேண்டும். ஏழைகள் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் விளைவைப் பொறுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீதிக்கு வந்து போராட்டம் மேற்கொள்வார்.

இந்தி மொழியை இணைப்பு மொழியாக கற்றுக் கொள்ள வேண்டும் என அமித்ஷா தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நீதி மய்யம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. உலகம் முழுவதும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதனால் அது தான் இணைப்பு மொழி" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சொத்து வரி உயர்வை திரும்ப பெற அதிமுக, பாஜக வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.