ETV Bharat / city

‘பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது’ - பொங்கிய கமல்: காரணம் என்ன? - Kamal Haasan tweet news in Tamil

மதுரை: தனது தேர்தல் பரப்புரைக்கு அனுமதி மறுத்தது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்
மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்
author img

By

Published : Dec 13, 2020, 2:18 PM IST

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (டிச. 13) முதல் 16ஆம் தேதிவரை முதல்கட்டமாக நான்கு நாள்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நான்கு நாள்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த முதல்கட்ட தேர்தல் பரப்புரைப் பயணமானது, மதுரையிலிருந்து தொடங்குகிறது. 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசனின் மநீம இன்று (டிச. 13) மாவட்டத்தின் பல பகுதிகளில் பரப்புரை செய்ய இருந்தநிலையில் அதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்
மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்

இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், “பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது. பாதை பழசு. பயணம் புதிது. வெற்றி நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.