தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், மநீம தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவிவருகிறது.
அந்தவகையில், அரியலூர் மாவட்டத்தில் அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கமல்ஹாசன் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்?” என்று சாடினார்.
இதற்குப் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “முதலமைச்சரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “பிக்பாஸ் பார்ப்பதில்லை, ப்ரோமோ மட்டும்தான் பார்க்கிறோம்” என்றார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் முதலமைச்சர் குறித்து ட்வீட் செய்த கமல்ஹாசன், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்?” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் #நான்_கேட்பேன் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க...சேலத்தில் 5 நாள்கள் முகாமிடும் முதலமைச்சர்: முழு விவரம் உள்ளே...