மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளிலும்; சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலா 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தும், இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் இருந்தும் வெளியேறி மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சமக அதிமுக கூட்டணியுடனும், ஐஜேகே கட்சி பாஜகவுடனும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: தனிமனித தாக்குதல் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன்