ETV Bharat / city

மநீம கூட்டணி தொகுதிப்பங்கீடு! - இன்று மாலை அறிவிப்பு!

சென்னை: தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

mnm
mnm
author img

By

Published : Mar 8, 2021, 3:15 PM IST

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல், "மநீம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவைக்கான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இன்று மாலையில், 3 கட்சித் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டாக அறிவிப்பார்கள். அப்போதே ஒப்பந்தமும் கையெழுத்தாகும். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எங்களுக்கு இத்தேர்தலில் ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சமக மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் மநீமவிடம் தலா 34 தொகுதிகள் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.