ETV Bharat / city

நீரஜ் சோப்ராவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து - neeraj chopra live

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ராவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ட்விட்டரில் வாழ்த்து

author img

By

Published : Jul 24, 2022, 11:53 AM IST

அமெரிக்காவில் ஓரிகன் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தொலைவிற்கு வீசி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார் நீரஜ் சோப்ரா. இது உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா ஆடவர் பிரிவில் பெறும் முதல் பதக்கமும், முதல் வெள்ளி பதக்கமும் ஆகும்.

இதனையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் நீரஜ்ஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நீரஜ்சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதியுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து வருவதைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது!’ என குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா முதலமைச்சர் பாராட்டு: நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கத்தார், ‘உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. அவரை நான் வாழ்த்துகிறேன். ஹரியானாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் நீரஜ்’ என கூறியுள்ளார்.

ஹரியானா முதலமைச்சர் பாராட்டு:
ஹரியானா முதலமைச்சர் பாராட்டு

இதையும் படிங்க:நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.