ETV Bharat / city

இனித் தமிழகம் வெல்லும் - ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம்! - STALIN TWITTER BIO

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின், மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு முதலமைச்சர்" என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

முக ஸ்டாலின் எனும் நான், முதலமைச்சர் முக ஸ்டாலின், ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம், ஸ்டாலின் ட்விட்டர் பக்கம், MK STALIN TWITTER BIO CHANGED, STALIN TWITTER BIO
ட்விட்டர் சுயவிவரக் குறிப்பை மாற்றிய ஸ்டாலின்
author img

By

Published : May 7, 2021, 11:22 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 133 தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) முதலமைச்சராக பதவியேற்றார். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என தனது உறுதிமொழியை தொடங்கிய ஸ்டாலினுக்கு பின், வரிசையாக மற்ற அமைச்சர்கள் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் பெற்ற சில நொடிகளில், தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில், "தமிழ்நாடு முதலமைச்சர்" என்றும், முகப்பு படத்தில், ’இனித் தமிழகம் வெல்லும்’ என்றும் வார்த்தை அடங்கிய புகைப்படமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் எனும் நான், முதலமைச்சர் முக ஸ்டாலின், ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம், ஸ்டாலின் ட்விட்டர் பக்கம், MK STALIN TWITTER BIO CHANGED, STALIN TWITTER BIO
ட்விட்டர் சுயவிவரக் குறிப்பை மாற்றிய ஸ்டாலின்

அவரின் ட்விட்டர் பக்கத்தின் பெயருக்கு கீழ் உள்ள சுயவிவர குறிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர், நான் திராவிடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.