ETV Bharat / city

2023 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின் - 2023 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Apr 6, 2022, 2:07 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 18 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (மார்ச் 19) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மார்ச் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 6) மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 68.375 கோடி ரூபாய் முதலீடும், 205,802 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

'சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி' எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழில் வளர்ச்சிக்கு இவ்வளவு முயற்சிகளை எடுத்துள்ள இந்த அரசின் சார்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். துபாய் பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும் 15,100 பேருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நான் துபாய் நாட்டிற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் விளைவாக கிடைக்கப் போகும் முதலீடுகள். ஆகவே துபாய் நாட்டிற்குச் சென்ற அரசு முறைப் பயணம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் தான். அந்த இலக்கை எட்டும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறேன்.

இந்நிலையில், அடுத்த கட்டமாக 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'க்ளோபல் ஆஃப் ஷோர் வின்ட்' (Global Off Shore Wind) நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும் முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன.

முக்கியமாக எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும். அதன் மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். நம்முடைய பல லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இனிமேல் போடப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக வேலை வாய்ப்புகளாக மாறும். தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முடிவு: அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.