ETV Bharat / city

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு - ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு
தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு
author img

By

Published : Sep 21, 2021, 8:15 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் நாளை (செப்.21) தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு உள்ளிட்டப் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்துகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்னும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

உலகளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு, இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தொடக்க விழா, கண்காட்சி, கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்கள், நிறுவனங்கள் தமது பொருள்களை காட்சிப்படுத்தவுள்ளன.

இக்கண்காட்சி பொதுமக்களுக்காக செப்.22ஆம் தேதி மாலை 2 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

தொடக்க விழாவில் முதலமைச்சர் 'தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை' , 'குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு' ஆகியவற்றை வெளியிடுவார்.

இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடவுள்ளன.

முக்கிய அரசு அலுவலர்கள் பங்கேற்பு

இவ்விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச்செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி. அருண் ராய், ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குநர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடிதம் மூலம் பிடிஆர்-ஐ கண்டித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.