யோகா குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானாம்மாள் நேற்று மதியம் காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.
இவர் சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் போன்ற 50 கடினமான ஆசனங்களையும் அசாதாரணமாக செய்து அசத்தக் கூடிய திறமை படைத்தவர்.
இதுவரை நானாம்மாள் தான் கற்ற கலையைப் பல லட்சம் பேருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இவரிடம் யோகா பயின்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
![stalin-condolence-tweet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4882034_stalintweet.jpg)
இந்நிலையில், நேற்று யோகா ஆசிரியர் நானாம்மாள் உயிரிழந்தார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ‘உடல்நலம் காக்கும் யோகா பயிற்சி அளித்து, உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய, 'பத்மஸ்ரீ' நானாம்மாள் அம்மையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானம்மாள் பயிற்றுவித்த வழியில் உடல்நலம் பேணி ஆரோக்கியமான சமுதாயம் அமைப்பதே அவருக்கான புகழஞ்சலியாகும்!’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள: உருவத்தைப் பார்த்து வயதைக் கணக்கிடாதே - யோகா பாட்டி நானம்மாளின் தொகுப்பு!