மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருணாநிதி மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் மறுபடியும் பிரதமராவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் எனக் கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் அளித்த வாக்குறுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களின் எதிர்கால பணி சிறக்க வாழ்த்துவதோடு, அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்படுவீர்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.