ETV Bharat / city

5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அம்மன் குத்துவிளக்கு சிலை கண்டுபிடிப்பு - திருப்பனந்தாள் ஏரி

பல்லாவரம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சூரிய அம்மன் கோயிலில் குத்து விளக்கு சிலை ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின்பு காணாமல் போன அம்மன் குத்துவிளக்கு சிலை கிடைத்துள்ளது

author img

By

Published : Jun 18, 2022, 9:31 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் திருப்பனந்தாள் ஏரியை தூர் வாரும் பணி தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் ஏரியை ஜேசிபி இயந்திரம் கொண்டு தூர் வாரி கொண்டிருந்தனர். அப்போது சேறு,சகதியுடன் சேர்த்து விளக்கு போன்ற அரிய பொருள் ஒன்றும் மேலே வந்தது.

இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த தொழிலாளர்கள், அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து பார்த்த போது, அது சுமார் ஒன்றரை அடி உயரத்தில், ஐந்து கிலோ எடை உடைய பித்தளை குத்து விளக்கு சிலை என்பது தெரிய வந்தது. உடனடியாக தொழிலாளர்கள் அதனை தாம்பரம் மாநகராட்சி, பம்மல் மண்டல குழு தலைவர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அம்மன் குத்துவிளக்கு சிலை கிடைத்துள்ளது

அதனை பெற்றுக் கொண்ட வருவாய் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது, அந்த குத்து விளக்கு சிலை பம்மல், அண்ணா சாலையில் அமைந்துள்ள சூரியம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு கொள்ளையர்கள் சூரியம்மன் கோயில் சுவர் ஏறிக் குதித்து, இந்த குத்து விளக்கு சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர். இந்த அரிய குத்து விளக்கு சிலையை தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறை அலுவலர்கள் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.