சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜக்ரியா அப்பாஸ். இவரது மனைவி அமீதா. இவர்களின் 10 வயது மகள் தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், பக்கத்து வீட்டிலுள்ள சிறுவர்களுடன் நேற்று (ஆகஸ்ட் 3) விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர், தான் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நேரத்தில், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணவில்லை எனத் தேடியுள்ளனர்.
வெகு நேரமாகியும் மகள் கிடைக்காததால் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுமியை மீட்ட காவல் துறை
மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுமி கையில் பையுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், பல்லாவரத்தைச் சேர்ந்த நரிகுறவர்கள், காணாமல் போன அச்சிறுமியை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சிறுமியை இரண்டு மணி நேரம் கழித்து அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பெற்றோர் திட்டியதால் சிறுமி வீட்டிலிருந்து வெளியேரி இருக்க கூடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் சிறுமி புகைப்படம்... மிரட்டிய முன்னாள் அதிமுக நிர்வாகி கைது!