கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாழவந்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் வனச்சரக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது கிராமத்திற்கு அருகே உள்ள செம்பியன் மாதேவி கிராமத்தில் அமைந்துள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காலை மீண்டும் வீட்டிற்கு திரும்புகையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சீதாராமன், தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வ விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சிக்கன் கடை ஷட்டரை உடைத்து கல்லாப்பெட்டியை தூக்கிச்சென்ற கவ்பார் கொள்ளையர்கள்!