ETV Bharat / city

'கரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை' - கரோனா நிலவரம் குறித்து விஜயபாஸ்கர் செய்தி

தமிழ்நாட்டில் இன்று (மே 25) 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 16,277லிருந்து 17,082ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 549 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 87 பேருக்கும், கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கும், ஆந்திராவில் ஒருவருக்கும், குஜராத்தில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Minister vijayabaskar update on corona
Minister vijayabaskar update on corona
author img

By

Published : May 25, 2020, 8:13 PM IST

சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,576இல் இருந்து 11,125ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று கரோனாவால் ஏழு பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,277இல் இருந்து 17,082ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 4.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வருகை தந்தவர்களில் 952 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஏற்பட்ட 88 விழுக்காட்டினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 12 விழுக்காட்டினர்தான் அறிகுறியுடன் உள்ளனர்.

அறிகுறி உள்ளவர்களில் 40 விழுக்காட்டினருக்கு காய்ச்சல், 37 விழுக்காட்டினருக்கு இருமல், 10 விழுக்காட்டினருக்கு தொண்டை வலி, 9 விழுக்காட்டினருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான மருந்துகளை சரியாக அளித்து மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதிகபட்சமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களே உயிரிழக்கின்றனர்.

ஏற்கனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்தவர்கள் கரோனாவால் அதிகளவில் (84%) உயிரிழந்தனர். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 50 விழுக்காடு நபர்கள் 60 வயதை கடந்தவர்கள். கரோனா பாதிப்பை சிறப்பாக கையாண்டு வருவதாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது என்றும், மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டை பின்பற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க... கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதா? - ஆராய்ச்சியை தொடங்கிய ஐசிஎம்ஆர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.