ETV Bharat / city

கரோனா தடுப்பு: ஐ.டி. நிறுவனங்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை

சென்னை: கரோனா பரவல் தடுப்பு குறித்து 40 ஐ.டி. நிறுவனங்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

rb udayakumar
rb udayakumar
author img

By

Published : Mar 22, 2020, 7:04 AM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள செங்கல்வராயன் மாளிகையில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கரோனா பரவல் தடுப்பு குறித்து 40 ஐ.டி. நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அவருடன் வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலர் (தகவல் தொழில்நுட்பத் துறை) ஹன்ஸ் ராஜ் வர்மா, கூடுதல் தலைமைச் செயலர் (வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை) அதுல்யா மிஸ்ரா, நாஸ்காம் மென்பொருள், சேவைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பொதுமக்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், வீட்டிலிருந்தே பணியாற்றுதல், கூட்டமாகக் கூடுதலைத் தவிர்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழ்நாட்டின் 101 எல்லை சோதனைச் சாவடிகளுக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குள்படுத்தப்படுகின்றன.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினர் அவர்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளார்கள். அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அலுவலகத்திலிருந்து செய்யப்படுகிறது. வீட்டிலிருந்து பணியாற்ற அதிவேக இணையதள வசதி வேண்டும் என ஐ.டி. நிறுவனங்கள் கோரிக்கைவைத்துள்ளனர். அதனை முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு வெளியிடும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும். வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சுய ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கரோனா பீதி: மருந்து நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.