ETV Bharat / city

நைஜீரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி

author img

By

Published : Dec 15, 2021, 7:19 PM IST

Updated : Dec 15, 2021, 9:52 PM IST

நைஜீரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய, அவர்களது மரபணு பரிசோதனை முடிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என பெங்களூரு ஆய்வகத்திடம் கேட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதில் ஒருவருக்கு தற்போது ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான்?

சென்னை: ராணி மேரி கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் நடத்தும் கரோனா விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ராணிமேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கிய பிறகு மாணவர்கள் நடத்திய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ராணி மேரி கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இன்னும் 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

கல்லூரி மாணவ - மாணவிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை, ராணி மேரி கல்லூரி முறையாகப் பின்பற்றி, தங்களுடைய பணியை செய்து வருகிறது.

தமிழ்நாட்டிலேயே 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய கல்லூரியில் ராணி மேரி கல்லூரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கும் பாதிப்பு

நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய குடும்பத்தினரையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்தவரால் அவருடைய குடும்பத்தினர் ஆறு பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

அதனால் தான் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை. நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மரபணு பரிசோதனை முடிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என பெங்களூரு ஆய்வகத்திடம் கேட்டுள்ளோம். கடந்த 10 நாள்களில் தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் 40 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அதில் நான்கு நபர்களுக்கு டெல்டா எனத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 36 நபர்கள் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

12ஆயிரத்து 39 நபர்களுக்கு பரிசோதனை செய்து வீட்டுத் தனிமையில் உள்ளனர். நைஜீரியாவில் இருந்து வந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என 7 பேருக்கும் அறிகுறியற்ற (asymptomatic) தொற்று தான் உள்ளது. அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளிட்ட நிலை தற்போது வரை இல்லை. அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

40ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள், 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்டிலேட்டார் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது, 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வைத்துள்ளோம். 3ஆம் முறை தடுப்பூசி செலுத்துவற்கு ஒன்றிய அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை" என்றார்.

உறுதி செய்யப்பட்ட ஒமைக்ரான்

இதனைத்தொடர்ந்து இரவு டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

நம்மிடம் உள்ள நவீன தொழில் நுட்பத்தின் மூலம் அவருக்கு எஸ் ஜீன் இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேருக்கும்; அவருடன் பயணித்த வளசரவாக்கத்தைச் சார்ந்த ஒருவருக்கும் எஸ் ஜீன் ட்ராப் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது

இதனால் உடன் பயணித்த 7 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர்கள் நன்றாக இருப்பதாக கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பட்டியலில் ஒரே ஒரு குழந்தையும் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட 7 பேரும் உள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!

Last Updated : Dec 15, 2021, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.