ETV Bharat / city

மத்திய அரசு உடனடியாக அடிப்படை மானியத் தொகையை வழங்க எஸ்.பி. வேலுமணி கோரிக்கை - மத்தியரசிடம் கோரிக்கை வைத்த வேலுமணி

சென்னை: தமிழ்நாட்டிற்கான அடிப்படை மானியம், செயலாக்க மானியத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கும்படி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

tn_che_9_ sp velumani_7209106
tn_che_9_ sp velumani_7209106
author img

By

Published : Nov 21, 2020, 2:51 PM IST

மத்திய அரசின் சார்பில் ஆவாஸ் திவாஸ் (Awaas Diwas) வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், இன்று (நவம்பர் 21) டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள PMAY (G) பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் வேலுமணி பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்திட முன்னுரிமை வழங்கி செயல்பட்டுவருகிறார்கள்.

இத்திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கான அளவுத் தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழ்நாடு அரசு கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.50,000 கூடுதலாக வழங்குகிறது.

2016 முதல் 2020 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,27,552 வீடுகளில் இதுவரை 4,01,106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு 2,65,029 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,36,077 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,26,446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

2016 முதல் 2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ. 3,798.38 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ. 2,53,225 கோடி, கான்கிரீட் மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ. 2,637.76 கோடி என மொத்தம் ரூ. 8,968.39 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலின்படி இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற குடும்பங்கள் என நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகளைத் தவிர்த்து சுமார் 2,90,000 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2011 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை உள்ளாட்சி துறையின் சார்பில் நகர்ப்புற - ஊரகப் பகுதிகளில் 17.08 இலட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இதில் ஊரகப் பகுதிகளில் மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட 18.30 இலட்சம் வீடுகளில் 15.31 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற பல தகுதி வாய்ந்த குடும்பங்கள் அல்லது பயனாளிகளின் பெயர்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011இல் இடம்பெறவில்லை.

தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகளை சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்திட மத்திய அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9.11 லட்சம் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட இலக்கினை அடைய ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து பயனாளிகளை தேர்வு செய்ய ஒப்புதல் வழங்க கோரி மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைந்து வழங்கிட இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான 14வது மத்திய நிதிக் குழுவின் தமிழ்நாட்டிற்கான அடிப்படை மானியம் ரூ. 548,76 கோடி, செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி என மொத்தம் ரூ. 1,254.38 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

பாரத பிரதமர் அவர்களின் அனைவருக்கும் வீடு என்கின்ற எண்ணத்தை வருகின்ற 2022 ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில் முழுமையாக நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்பழனிசாமி, உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.