மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அயப்பாகம் ஊராட்சியில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள், வீட்டுக்கு வீடு குடிநீர் , உயர்நிலை குடிநீர் தொட்டி, உயர் கோபுர மின்விளக்கு, குளம் சீரமைத்தல் உள்ளிட்ட நலத்திட்டங்களை ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். பின்னர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின், “ சிறு குறு தொழில் முனைவோருக்கு ’டிக்’ எனும் திட்டத்தின் மூலம் பிணை இல்லாமல் 50 லட்சம் வரை நிதி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சிறு குறு தொழில்களுக்கு விண்ணப்பித்த 95 விண்ணப்பதாரர்களுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் அனுமதிப்படும் “ என்றார்.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, ’ஆட்சிக்கு வந்தாதான...வந்தா...பாத்துக்கலாம்...எனக் கிண்டலாக அமைச்சர் பெஞ்சமின் பதிலளித்தார்.
இதையும் படிங்க: மாநகராட்சி சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு சலுகை!