சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப். 8) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். அவற்றை இங்கு காண்போம்...
- மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள்/எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000. எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.6,000, மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும்.
- கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.
- அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
- பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) வழங்கப்படும்.
- உணவு தானியங்கள் சேமிப்பதற்காக நபார்டு நிதி உதவியுடன் 12 வட்ட செயல்முறை கிடங்குகள் 2,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணிணிமயமாக்கப்படும்.
- ரூ.70.75 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
- திருவள்ளூர், பொள்ளாச்சி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிர்வு முறையில் 3 சிறப்பு சுற்றுக்காவல் படைகள் உருவாக்கப்படும்
- குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படும்.
- தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன சொந்த நிதியிலிருந்து, ரூ.20 லட்சம் செலவில் கணிணிமயமாக்கப்படும்
- ராணிப்பேட்டை, திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.
இதையும் படிங்க : சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடக்கூடாது - சினம் கொண்ட ஈபிஎஸ்