சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அவர் வெளியிட்டதில் 1 லட்சத்து 58ஆயிரத்து 157 மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் பொதுப்பிரிவில் 7615 மாணவர்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 74 ஆயிரத்து 605 மாணவர்களும், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் பிரிவில் 7203 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 42 ஆயிரத்து 716 பேரும், ஆதிதிராவிடர் பிரிவில் 21723 பேரும், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் 3480 பேரும், பழங்குடியினர் பிரிவில் 815 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதேபாேல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 22,587 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவில் 351 மாணவர்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 7 ஆயிரத்து 226 மாணவர்களும், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 512 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 7 ஆயிரத்து 973 பேரும், ஆதிதிராவிடர் பிரிவில் 4880 பேரும், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் 1344 பேரும், பழங்குடியினர் பிரிவில் 292 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பானையில் நீர் அருந்தியமைக்கு மாணவன் கொல்லப்பட்ட விவகாரம்... கடும்நடவடிக்கை எடுக்க என்சிபிசிஆர் வலியுறுத்தல்