ETV Bharat / city

இந்தியில் துண்டுப் பிரதிகளை வழங்கி பரப்புரைசெய்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்!

author img

By

Published : Mar 20, 2021, 7:58 PM IST

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்தி மொழியில் துண்டுப்பிரதி அடித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி, ஆவடி, அமைச்சர் பாண்டியராஜன், சென்னை, இந்தியில் துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் பாண்டியராஜன் பரப்புரை, minister-pandiyarajans-campaign-by-distributing-leaflets-in-hindi, Chennai, Avadi, Minister pandiyarajan
minister-pandiyarajans-campaign-by-distributing-leaflets-in-hindi

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் பாண்டியராஜன். தற்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் பாண்டியராஜன் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில் ஆவடியில் உள்ள ஜெயின் சமூகம், வட இந்தியர் போன்றவர்களைக் கவரும்விதமாக இந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரதிகளை வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக ஆவடி ஜெயின் பவனில் ராஜஸ்தான் அசோசியேஷன் நிர்வாகிகளைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரதியை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் பெஞ்சமினுக்கு 108 தேங்காய் உடைத்து உற்சாக வரவேற்பு
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.