ETV Bharat / city

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு: இதுதான் கூட்டாட்சியா.. பழனிவேல் தியாகராஜன் கேள்வி! - இதுதான் கூட்டாட்சியா

வெறும் 50 விழுக்காடு மட்டும் பெட்ரோல், டீசல் வரியை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : May 22, 2022, 10:37 AM IST

சென்னை: ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரிகளை தற்போது 50 விழுக்காடு மட்டும் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவு மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரியை 250 விழுக்காடு அதாவது 23 ரூபாயும், டீசல் மீதான வரியை 900 விழுக்காடு அதாவது 29 ரூபாயும் ஒன்றிய அரசு உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது வெறும் 50 விழுக்காடு மட்டும் வரியை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தக்காளியை தொடர்ந்து சதமடித்த பீன்ஸ், அவரைக்காய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.