சட்டப்பேரவையில் இன்று (பிப்.26) 2021- 2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது.
இதில், கேள்வி நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓஎஸ் மணியன், “திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரமங்கலம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது” என்றார்.
மேலும், “வரும்காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இங்கு இடமில்லை. எதிர்க்கட்சியின் தோல்வி தற்போதே தெரிந்து விட்டது. மக்கள் பிரச்சினை பற்றி பேரவையில் பேசாமல் புறக்கணித்து விட்டனர். அதனால், மக்கள் வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு தேவையானவற்றை முறையாக செய்து அதற்கான ஆணையை வெளியிட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சிக்கு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...இடைக்கால நிதிநிலை அறிக்கை: பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்