ETV Bharat / city

சென்னை-மயிலாப்பூர் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஊரக தொழிற்துறை அமைச்சர்

சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை-மயிலாப்பூர் தொகுதிக்குள்பட்ட நான்கு திட்டப்பகுதிகளில் 426.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று ஆய்வு செய்தார்.

ரூ. 426.19 கோடி மதிப்பீட்டில் 3,260 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஊரக தொழிற்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 11, 2021, 8:59 PM IST

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பருவகால மாறுபாட்டினால், சிதிலமடைந்த கட்டடங்களை இடித்து, அதே இடங்களில் மறுகட்டுமானம் செய்து, முன்னர் அக்குடியிருப்பில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. மறுகட்டுமானம் என அழைக்கப்படும் இத்திட்டத்தின்கீழ் ஏகாம்பரம்பிள்ளை, முனுசாமிபிள்ளை திட்டப்பகுதிகளில் 31.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 208 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இப்பணிகளை ஆய்வுசெய்த ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட்டார்.

பட்டினப்பாக்கம்

இப்பகுதி அருகாமையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புதாரர்களையும் கணக்கெடுப்பு செய்து அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்புகள் கட்ட உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தினார்.

பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் 152 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் 1,188 குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, மேம்பட்ட தரத்தினை உறுதி செய்யவும், கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமமான சூழ்நிலையிலும் கட்டுமானப் பணிகளை காலதாமதம் இல்லாமல், நிர்ணயித்த காலவரம்பிற்குள் பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கவேண்டும் எனவும் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சீனிவாசபுரம்

மேலும், இத்திட்டத்தின்கீழ் சீனிவாசபுரம் பகுதி-1 திட்டப்பகுதியில் 51.48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் 396 குடியிருப்புகளையும் ஆய்வுசெய்து பணிகளை துரிதமாக செயல்படுத்த உத்தரவிட்டார். மேலும், டொம்மிங்குப்பம் திட்டப்பகுதியில் மறுகட்டுமானத் திட்டத்தின்கீழ் 191.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,472 குடியிருப்புகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொம்மிக்குப்பம்

அதனைத் தொடர்ந்து, பொம்மிக்குப்பம் திட்டப்பகுதியில் தற்போதுள்ள சிதலமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, புதிதாக கட்டப்பட்டுவரும் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான உரிய தீர்வை விரைவில் முடிவுசெய்து, அதனை செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

சீனிவாசபுரம்

சீனிவாசபுரம் பழைய குடியிருப்புகளை ஆய்வுசெய்து, அதே இடங்களில் அமையவுள்ள புதிய குடியிருப்புகள் ஐந்து மாடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு திட்டமிட அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வேலு, குடிசைப்பகுதி மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் இராம.சேதுபதி மற்றும் வாரியபொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.