சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு தண்டலதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுமியை தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தொடர்ந்து 3-வது நாளாக இன்று (ஆக.20) பால்வளதுறை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஓரிரு நாளில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறுமியின் மருத்துவ சிகிச்சை குறித்து முதலமைச்சர் நாள்தோறும் விசாரிப்பதாகவும் நாசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவடி சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நலம் விசாரித்த அமைச்சர்