ETV Bharat / city

கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் முத்துசாமி - சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

அரசு கட்டடங்களை கட்ட முன்வரும் ஒப்பந்ததாரர்கள் தரத்தை முறையாக பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tamilnadu Housing Department minister Muthusamy, Minister muthusamy inspection in Ayapakkam Housing Board, அயப்பாக்கம் வீட்டுவசதித் துறை வாரிய குடியிருப்பை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி
Tamilnadu Housing Department minister Muthusamy
author img

By

Published : Dec 5, 2021, 8:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கனமழைக்கு பின்பு அனைத்து பகுதியிலும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி நேற்று (டிசம்பர் 4) ஆய்வு செய்தார்.

அப்போது, சாலையில் மழை நீருடன் கலந்த கழிவு நீரில் நடந்து சென்று ஆய்வினை மேற்கொண்டார். பின்னர், அனைத்து சாலைகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாததால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் அமைச்சரிடம் மக்கள் கேட்டனர்.

கடந்த கால கட்டடங்கள் ஆய்வு

இதனை, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "400 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை கடந்த காலங்களில் ஒழுங்குபடுத்ததால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வுகாண்பது தங்களது கடமை. ஒரு மாதத்தில் தற்காலிகத் தீர்வும் வரும் காலங்களில் நிரந்தர தீர்வும் காணப்படும். மேலும் கடந்த காலங்களில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் மாதிரிகள் ஆய்விற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அதில் குறைகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது கட்டப்படும் கட்டடங்கள் ஒவ்வொரு நிலையிலும் பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம்.

அவர் இனிவரும் காலங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கட்டடம் தரத்தில் எச்சரிக்கையாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பல்வேறு புதிய திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.