ETV Bharat / city

நீர் வழித்தட பத்திரப்பதிவு - அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் - அமைச்சர் மூர்த்தி - water way land registration issue

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள், நீர் வழித்தடங்களில் உள்ள இடங்களை பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நீதிமன்றத்திற்கு செல்லாமல் துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பி.மூர்த்தி
அமைச்சர் பி.மூர்த்தி
author img

By

Published : Nov 26, 2021, 8:46 PM IST

வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:

“எல்லா துறைகளிலும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதில் முன்மாதிரியாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். மழை காரணமாக வெள்ள சேதத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி, குறைந்த நாள்களில் அவற்றை சீர் செய்துள்ளார். வணிகவரித்துறை மூலமாக பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்று ஆய்வு செய்தேன். ஆய்வில் அரசுக்கு வரக்கூடிய வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.

'வரி ஏய்ப்பு செய்பவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்

சிலர் அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாயை செலுத்தாமல் உள்ளனர். இன்னும் நான்கு மாத காலத்தில் வரி வருவாயை உயர்த்த வேண்டும் என கூறியுள்ளேன். ஆய்வுப்பணிக்காக புதிதாக 100 வாகனங்கள் வாங்கப்படும். கடந்த காலத்தைவிட இந்த ஆண்டு வரி வருவாய் உயரும். தொடர்ந்து வரி ஏய்ப்பு பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

பதிவுத்துறையில் கடந்த காலத்தை விட தற்போது வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. ஏமாற்றுபவர்கள் எவ்வளவு பெரிய ஆள்களாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறையில் பெயரோடு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வரும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள், நீர் வழித்தடங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றை பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நீதிமன்றத்துக்கு செல்லாமல் துறை அலுவலர்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் தமிழ்நாட்டில் நடப்பாண்டின் அக்டோபர் மாதம் முடிய மொத்தம் (இழப்பீட்டுத் தொகையுடன்) 56,295 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் 2020 வரை ஒப்பிடுகையில் 26 விழுக்காடும், அக்டோபர் 2019 முடிய ஒப்பிடுகையில் மூன்று விழுக்காடும் கூடுதல் வளர்ச்சி விகிதமாகும்.

வரி ஏய்ப்பைக் களைய புகார் பிரிவு

வரிஏய்ப்பு வணிகர்களின் குறைகளைக் களைவதற்காக கடந்த 01.07.2021 முதல் புகார் பிரிவு தொடங்கப்பட்டது. இதுவரை 333 புகார்கள் மின்னஞ்சல் மூலமும், 426 புகார்கள் தொலைபேசி மூலமும் பெறப்பட்டு 638 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வணிகவரித்துறையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் நுண்ணறிவுப் பிரிவு சுற்றும் படை அலுவலர்களால் 1,74,199 வாகனங்கள், 2,21,543 மின் வழிச்சிட்டுகள் தணிக்கை செய்யப்பட்டு 3,256 குற்றங்கள் கண்டறியப்பட்டன.

அதன்மீது வரி, அபராதத் தொகையாக 17.64 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. வரி ஏய்ப்பினைத் தடுக்கும் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் இருந்த 50 சுற்றும் படை குழுக்கள் தற்போது 100 சுற்றும்படை குழுக்களாக உயர்த்தபபட உள்ளது.

மேலும் 100 புதிய வாகனங்களும் வழங்கப்பட உள்ளன. நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் மேற்கண்ட காலகட்டத்தில் 465 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 25.99 கோடி ரூபாய் வரி, அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டது. மேலும் ஆய்வின் மூலம் போலி வணிகர்கள் கண்டறியப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்படவும், நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இணைய வழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு கட்டண விலக்கு

மேலும் சிறு வணிகர்கள் நலவாரியத்தில் செப்டம்பர் 2021 வரை சேர்வதற்கான கட்டணத்திலிருந்து விலக்களித்து தமிழ்நாடு முதலமைச்சரால் ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை மார்ச் 2022 வரை நீட்டிக்கப்படும். இச்சலுகை காரணமாக 12.334 உறுப்பினர்களாக இருந்த நலவாரியம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையையொட்டி 40,442 உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது.

இதில் இலவச சேர்க்கையின் மூலமாக 38,135 உறுப்பினர்களும், சேர்க்கை கட்டணம் செலுத்தி 2,307 உறுப்பினர்களும் சேர்ந்துள்ளனர். மேலும், அவர்களுள் 8,544 உறுப்பினர்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாகவும், 31,898 உறுப்பினர்கள் இணை ஆணையர் மூலமாக சேர்ந்துள்ளனர். ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான 25 மணி நேர தொடர் போராட்டம்: வெற்றிகண்ட ஜோதிமணி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.